இலங்கையில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Report Print Thayalan Thayalan in வர்த்தகம்
இலங்கையில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள கேள்வியானது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தெங்கு உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மண்முனை மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதேசத்தின் தெங்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுணதீவில் தென்னந் தோட்டங்கள் செய்யக்கூடிய பிரதேசங்களையும் கிராமங்களையும் இனங்கண்டு அதில் தனியாரை இணைத்துக்கொண்டு அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது பிரதேசத்திற்கு தேவையான தேங்காய்களை ஓரளவேனும் பூர்த்தி செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1978 சூறாவளிக்கு முன்னர் இப்பிரதேசத்தில் அதிகளவான தென்னந் தோப்புகள் இருந்தன அந்தக் காலகட்டத்தில் பல தோப்புகள் அழிவடைந்தது. ஆனால் அதனை இன்னும் எவரும் ஈடுசெய்யவில்லை.

மட்டக்களப்பில் தெங்கு உற்பத்தி பிராந்திய நிலையம் அமைந்துள்ளதால் மேற்படி திட்டத்தினை மேற்கொள்வதும் அதுதொடர்பில் ஆலோசனைகளைப் பெறுவதும் இலகுவாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers