சிறிய முதலீட்டில் அதிக லாபம்? இதோ சூப்பர் ஐடியா

Report Print Raju Raju in வர்த்தகம்

பல பேருக்கு பிறரிடம் கைகட்டி வேலை பார்க்க பிடிக்காமல் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் என்ன தொழிலில் ஈடுபடுவது, எவ்வளவு முதலீடு தேவைப்படும் என விடயங்களை பற்றி சரியான புரிதல் இல்லாமல் அதை செய்யாமல் இருப்பார்கள்.

சரி, சிறு முதலீட்டில் என்ன தொழில் தொடங்கலாம்?

ரியல் எஸ்டேட்

மனிதனின் அடிப்படை தேவைகளின் ஒன்று வீடு. அது சம்மந்தமானதே இந்த ரியல் எஸ்டேட் தொழில்.

அதிக மக்களை சந்திக்கும் திறமையும், நல்ல பேச்சாற்றலும் இதற்கு இருக்க வேண்டும். சாதாரண நிலையில் இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் ஆனவர்கள் ஏராளம்!

மொபைல் ரீசார்ஜ்

இன்றைய திகதிக்கு செல்போன் உபயோகப்படுத்தாத மக்களை எங்காவது பார்க்க முடியுமா?

எல்லா சாலைகளிலும் செல்போன் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல தற்போது பெருகி வருகின்றன, இதற்கு அதிக முதலீடும் தேவையில்லை.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட்

இதற்கு நிகழ்ச்சி மேலாண்மை என பொருள். ஒரு பர்த்டே பார்ட்டி நடக்கிறது என்றால் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் மேலாளர்களை அணுகி அவர்களிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டால் போதும்.

அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள். இதை நாம் தனியாக தொடங்கலாம். இதற்கு நிறைய மனிதர்களின் தொடர்ப்பு இருப்பது அவசியம்.

டியூசன் வகுப்புகள்

பள்ளிக்கூடத்துக்கு சென்றாலும் இன்று பல குழந்தைகளை டியூசன் வகுப்புக்கு அனுப்பவும் பெற்றோர்கள் தவறுவதில்லை. நல்ல படிப்பறிவு இருந்தால் இதை யார் வேண்டுமானாலும் தாராளமாக தொடங்கலாம்.

நிதி நிறுவனங்கள்

பங்கு வர்த்தகம், இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற விடயங்களில் நல்ல அறிவும், ஞானமும் இருந்தால் இந்த தொழிலை தொடங்கலாம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments