அடேங்கப்பா..1 ரூபாய்க்கு 1 GB! ஜியோவுக்கு போட்டியாக BSNL

Report Print Basu in வர்த்தகம்

1 GB இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை ஒன்றை அறிவித்து ஜியோவுக்கு போட்டியாக BSNL களமிறங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.50-க்கு 1 GB 4ஜி டேட்டாவை அறிவித்துள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான BSNL.

1 GB இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகக்குறைந்த விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை ஒன்றை வரும் 9-ம் திகதி அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 GB டவுண்லோடு செய்யும் பட்சத்தில் 1 GB இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதை BSNL சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்த சலுகை ஒரு அறிமுகச்சலுகை மட்டுமே என்பதையும் BSNL தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments