ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது, அதன்படி இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.384 அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.23 ஆயிரத்தை தொட்டது.
இதே போல வெள்ளி விலையிலும் உயர்வு காணப்பட்டது. கிராம் ரூ.46 ஆகவும், 1 கிலோ ரூ.42,985 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு 59 ரூபாய் உயர்ந்து, ரூ. 2919-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு 472 ரூபாய் அதிகரித்து ரூ.23352-ஆக இருந்தது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 63 ரூபாய் உயர்ந்து ரூ.3122 என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு சவரன் 24976-க்கு விற்பனை ஆனது.
இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.45.10-ல் இருந்து ரூ.46.10 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.43055-க்கு விற்பனை ஆனது.