முகம் முழுக்க முகப்பரு வடு அசிங்கமா இருக்கா?

Report Print Kavitha in அழகு
274Shares

முகப்பரு வடுக்கள் குறிப்பாக பெண்கள், ஒரு பெரிய மற்றும் மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சனையில் ஒன்று.

ஒருவித ஹார்மோன் சற்று அதிகமாவதால் முகத்தில் எண்ணெய் பசையுடன் சேர்த்து முகப்பருக்களும் வருகின்றன.

தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணைப்பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாவதே முகப்பரு. ஒரு சிலருக்கு இந்த முகப்பருக்கள் மறைந்த பின்னரும் கூட அதன் தழும்புகள் முகத்திலிருந்து போகாதவாறு உள்ளது.

இதற்கு கண்ட கண்ட கிறீம்களை தான் போட வேண்டும் என்று அவசியமில்லை. இயற்கையிலேயே தீர்வு உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வடுக்களின் மீது தக்காளி கூழ் தடவி விடுவதன் மூலம் இது சருமத்துளைகளை சுருக்கி மந்தத்தை போக்குவதோடு நிறத்தை மீட்டெடுக்கவும் பயன்படுகிறது.

  • எலுமிச்சை சாறு வடுக்களின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை விட்டு பிறகு மந்தமான நீரில் கழுவி வரவேண்டும். தினமும் இரண்டு முறை இதை செய்து வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் அல்லது எலுமிச்சைச்சாறுடன் சம அளவு பன்னீர் கலந்து அல்லது நீர் கலந்து பயன்படுத்தலாம்.

  • மசூர் பருப்பு 2 டீஸ்பூன் அளவு அல்லது தேவையான அளவு எடுத்து முன் தினம் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் மைய அரைத்தெடுக்கவும். இதை வடுக்களின் மீது பயன்படுத்தி பேக் போடவும். உலரும் வரை வைத்திருந்து பிறகு முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுத்தால் வடுக்கள் கடுமையாக இருந்தாலும் மறையக்கூடும்.

  • உருளைகிழங்கை நீர் விடாமல் அரைத்து சாறாக்கி அதை வடுக்களின் மீது தடவவும். அவை உலர உலர மீண்டும் மீண்டும் தடவிகொண்டே இருக்கவும். தொடர்ந்து இதை செய்துவந்தால் வடுக்கள் முழுமையாக மறையக்கூடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்