பொடுகுத் தொல்லையா? இருந்து உடனடி நிவாரணம் பெற இவற்றை பின்பற்றினாலே போதும்!

Report Print Kavitha in அழகு
215Shares

பொடுகு வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இவை ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் காலமான 11 வயதுக்கு மேல் அதிகரிக்க தொடங்குகிறது.

இந்த நேரத்தில் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் நம் முடைய தலையில் ஸ்கால்ப் பகுதியில் ஆயிலை அதிகரிக்கும்.

இந்த ஆயிலில் தான் இந்த பங்கஸ் தொற்று அதிகரிக்கும். அப்போது பொடுகின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இப்படித்தான் பொடுகு பாடாய்படுத்துகிறது.

இதனை எளிய முறையில் கட்டுப்படுத்துவது சிறந்தது. தற்போது அந்த வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு கையளவு வேப்பிலையை 4 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரை இறக்கி குளிர வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியை அலச வேண்டும். இதனால் சீக்கிரம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

  • சிறிது தேங்காய் எண்ணெயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து, அந்த கலவையை தலைச்சருமத்தில் தடவி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, குறைந்தது 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பொடுகை விரைவில் தடுக்கலாம்.

  • சிறிது டீ-ட்ரீ எண்ணெய் சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

  • தலைச்சருமத்தில் தவி 2 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என சில வாரங்கள் மேற்கொள்ள வேண்டும். பேக்கிங் சோடா பயன்படுத்திய பின் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.

  • ஒன்றரைக் கப் வெள்ளை வினிகரில் 2 கப் நீரை சேர்த்து கலந்து, தலைச்சருமம் மற்றும் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த நல்ல பலனைக் காணலாம்.

  • சிறிது ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைச் சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துணியால் தலைமுடியைச் சுற்றி, குறைந்து 45 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்ய வேண்டும்.

  • சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் பொடுகு மறைந்துவிடும்.

  • பாதி எலுமிச்சை சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இல்லாவிட்டால், சிறிது எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, தலைச்சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து தலைமுடியை அலசி, பின் ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.

  • 2 ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, அதை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, பின் அதைக் கொண்டு தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பொடுகில் இருந்து விடுபடலாம்.

  • 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலைச்சருமத்தில் தடவி சில மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய பொடுகு காணாமல் போகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்