சருமத்துளைகளை எளிதில் அகற்ற இதோ சூப்பரான டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு
229Shares

சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும்.

சரும துளைகள் மூக்கு சுற்றி கன்னங்களை சுற்றி தான் காணப்படுகிறது.

இது திறந்திருக்கும் போது மேக் அப் வழியாக இதை மறைப்பது சாத்தியமில்லை. இதை அப்படியே விட்டுவிடுவதும் சருமத்துக்கு நல்லது கிடையாது.

இதனால் பருகள் அதிகம் பெருக வாய்ப்புண்டு. எனவே இதனை இயற்கை முறையில் சரி செய்வது சிறந்தது.

அந்தவகையில் இயற்கை முறையில் சருமத்துளைகளை மூடுவதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

  • ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து உங்கள் கழுத்திலிருந்து தலை வரை ஒரு கனமான போர்வையால் மூடி பாத்திரத்தில் வெளிவரும் ஆவியில் முகத்தை காட்டவேண்டும். முகத்தில் அதிக நீர் வெளியேறும். இவை எல்லாமே சருமத்தில் இருக்கும் அழுக்குகளே.
  • தக்காளி திறந்திருக்கும் துளைகளை மூட உதவி செய்கிறது. தக்காளியை மசித்து கூழ் போல் ஆக்கி 1 துளி தேன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதைதினமும் கூட செய்யலாம்.
  • எலுமிச்சை சாறு ஒரு பங்கு சேர்த்து அதனில் மூன்று பங்கு வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலந்து அதன் சாறில் பஞ்சு உருண்டையை நனைக்கவும் இதை முகம் முழுக்க தடவி 20 நிமிடங்கள் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.
  • வாழைப்பழத்தோலை எடுத்து சருமத்தில் வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்தால் முகத்தில் திறந்திருக்கும் துளைகள் பெருமளவு சுருங்கிவிடும்.
  • இரண்டு டீஸ்பூன் அளவு முல்தானி மிட்டி எடுத்து சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அடர்த்தியான பேஸ்ட் தயாரிக்கவும். இதை முகத்தில் தடவி அவை உலர்ந்ததும் முகத்தை கழுவினால் சருமத்துளைகள் இறுக கூடும்.
  • முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஓட்ஸ் மற்றும் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.
  • ஒரு டீஸ்பூன் மஞ்சள் எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் குழைத்து பேஸ்ட் போல் குழைக்கவும். அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இது துளைகளுக்கு வரும் பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும் சருமத்துளைகளை சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.
  • ஐஸ்கட்டியை எடுத்து சுத்தமான துணியில் சுற்றி முகத்தில் நன்றாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்