கை,காலில் அதிகமா முடி இருக்கா? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
1670Shares

பொதுவாக நம்மில் பல பெண்கள் தேவையற்ற முடியை நீக்க அதிகம் பணத்தை செலவழித்து சிரமப்படுவதுண்டு.

முகம், கை, கால்களில் இருக்கும் முடிகளை கடைகளில் விற்கும் ஹேர் ரிமூவிங் கிரீம்களைப் பயன்படுத்தி நீக்குகின்றனர்.

அதனால் இது தற்காலிகமாக தான் முடிகளை அகற்றும். அதை தொடர்ந்து செய்யாவிட்டால் பிறகு காடு போல் வளர்ந்துவிடும்.

பணத்தை செலவழித்து நீக்குவதை விட எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிதாக நீக்கலாம்.

அந்தவகையில் தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • எலுமிச்சை சாறுடன் சர்க்கரை, தேன் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றவும். இதை பொறுக்கும் சூட்டில் எடுத்து முடி வளரும் திசைக்கு எதிராக தடிமனாக பேஸ்ட் போல் ஆக்கிவிடவும். பிறகு 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு கைகளை சுத்தம் செய்து அதை மிதமான நீரில் நனைத்த டிஷ்யூ அல்லது கைகளால் பிரித்து எடுக்கவும்.பலன் வேகமாக கிடைக்க விரும்பினால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதை செய்யலாம்.
  • கொண்டைக்கடலை மாவு - 5 டீஸ்பூன், மாவை சூடான பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். இவை நன்றாக பேஸ்ட் அடர்த்தியாகும் வரை கலக்கி ஆகும் வரை கலக்கவும். இந்த பேஸ்ட்டை அடர்த்தியான முடி வளரும் திசையில் தடவவும். இது முழுவதுமாக அல்லது 80% வரை உலர வைத்து சருமத்தில் தடவவும். பிறகு மெல்லிய பருத்தி துணியை நனைத்து பேக் மீது அழுந்த துடைத்து சுத்தம் செய்யவும். பிறகு மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து எடுக்கவும். முடி உதிர்வு நன்றாகவே உணர்வீர்கள். தினமும் இதை செய்யலாம்.
  • ஒரு முட்டையுடன் சோளமாவு, உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விரல்களில் எடுத்து முடி இருக்கும் இடங்களில் வட்ட வடிவில் மசாஜ் போன்று தேய்த்து உலர விடவும். இவை நன்றாக உலர்ந்ததும் கைகளை ஈரமாக்கி சருமத்தை துடைக்கவேண்டும். குறைந்தது 5 நிமிடங்கள் வரையாவது ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். பிறகு மிதமான வெந்நீர் விட்டு நன்றாக கழுவி விடவும். இதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
  • மஞ்சள் கிழங்குடன் சந்தனத்தூள் கிளிசரின் கலந்து நன்றாக கலந்து முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி உலர விடவும். இது முற்றிலும் வறண்டு போன பிறகு சருமத்தை துடைத்து எடுங்கள். பிறகு ஈரமான பருத்தி துணியால் பேக்கை துடைத்து பிறகு மிதமான வெந்நீரில் கழுவினால் போதும். தினமும் கூட இதை செய்யலாம்.
  • பச்சை பயறை ஊறவைத்து போதுமான நீரில் ஊறவைக்கவும். காலையில் இதை மிக்ஸியில் அரைத்து இதனுடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து முழங்கை முழங்கால்களில் தேய்த்து ஸ்க்ரப் செய்ய வேண்டும். பிறகு இது உலரும் வரை காத்திருந்து விரல்களை நீரில் தோய்த்து தேய்த்து கழுவினால் போதும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்