அழகான, மென்மையான கைகளை பெற வேண்டுமா?

Report Print Kavitha in அழகு
154Shares

பொதுவாக நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவதை கைகளுக்கு கொடுப்பதில்லை. இதனால் கைகள் கருமையடைந்து காணப்படும்.

இதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று பல டிரிட்மெண்டுகள் எடுப்பதுண்டு. ஆனால் இதனால் பணமும், நேரமும் தான் செலவழியும்.

முகத்திற்கு செய்யும் பராமரிப்பில் பாதியை ஆவது உங்களது கைகளுக்கு செய்வது அவசியமாகும். இதனை வீட்டில் இருந்து கூட செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது மென்மையான கைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

  • முதலில் வீட்டில் இருந்தபடி காஃபி பொடியில் சர்க்கரைக் கலந்து எலுமிச்சை சாறு அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு கைகளில் தேய்த்து ஸ்கிரப் செய்யுங்கள்.

  • 10 நிமிடங்களுக்கு இவ்வாறு வட்டப்பாதையில் தேய்த்து ஸ்கிரப் செய்தபின் கழுவிவிட்டு ஈரத்தை துணியால் ஒட்டி எடுங்கள்.

  • பின் ஒரு ஜக் தண்ணீரில் சோப்பு ஆயில் விட்டு கலந்துவிட்டு அதில் விரல் முழுவதும் மூழ்குமாறு 5 நிமிடங்களுக்கு அப்படியே வையுங்கள்.

  • இதனால் ஓரங்களில் ஒட்டியிருக்கும் அழுக்குகள் கொஞ்சம் வெளியேறும். பின் பிரஷ் கொண்டு எஞ்சியிருக்கும் அழுக்குகளை தேய்த்து எடுங்கள்.

  • விரல் நகங்களின் ஓரங்களை சுற்றியும் தேய்த்து இறந்த செல்களை வெளியேற்றுங்கள்.

  • பின் கைகளை நேரடியாக குழாயை திறந்துவிட்டு விரல்களில் படும்படி அப்படியே பிரஷ் கொண்டு தேய்த்து கழுவுங்கள்.இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் முழுமையாக நீங்கும்.

  • இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்ய அழுக்குகள் தேங்காது. அதேசமயம் இறந்த செல்கள் நீங்கி கைகள் மென்மையாக இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்