முகத்தில் அழுக்கு அதிகமா இருக்கா? இதனை போக்க இரவு நேரத்தில் இவற்றை செய்தாலே போதும்

Report Print Kavitha in அழகு
1247Shares

பொதுவாக நம்மில் பலர் வெயிலில் அடிக்கடி செல்வதனால் முகத்தில் அழுக்கு படிந்து கருமையாவது வழக்கம்.

ஏனெனில் வெளியில் உள்ள தூசிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் நமது முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. இதனால், முகத்தில் உள்ள சரும துளைகளில் இந்த அழுக்குகள் அப்படியே படிந்து விடுகிறது.

இதனை போக்க கண்ட கண்ட கிறீம்களை தேர்வு செய்யமால் வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டு எப்படி இது போன்ற அழுக்கு, கருமையை போக்கலாம் என யோசித்தாலே போதும்.

அந்தவகையில் தற்போது முகத்தில் உள்ள அழுக்கை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

  • புதினா இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

  • முகம் இளமையோடு இருக்க 1/4 கப் கொக்கோ, 2 டீஸ்பூன் க்ரீம், 1/4 கப் கனிந்த பப்பாளி கூழ், 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1/4 கப் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

  • சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை நீக்க வால்நட்ஸை அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தை நீரில் கழுவி விட்டு, பின் அந்த வால்நட்ஸ் கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தேய்க்காதீர்கள். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

  • மஞ்சள் தூளுடன் அன்னாசி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவினால், கருவளையங்கள் குறையும்.

  • சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதற்கு மஞ்சள் தூளை கரும்பு சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்ய மஞ்சள் தூளுடன் சந்தன பவுடர் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும்.

  • சரும சுருக்கங்கள் மற்றும் சரும கருமையை சரிசெய்ய 1/4 கப் அரிசி மாவுடன், 1/4 கப் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • கற்றாழை சூரியக் கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பருக்களைப் போக்க உதவுகிறது. அதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்