இளநரையை கருப்பாக மாற்ற வேண்டுமா? இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு

இன்றைக்குப் பலருக்கும் தலைமுடி பிரச்னை சார்ந்த பிரச்சினைகள் பல உள்ளது. அதில் முக்கியமானது இளநரை.

இளநரைக்கு காரணம், பரம்பரை சம்பந்தமானது. ரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத்தவர்கள் இருந்தால் அது பரம்பரை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும்.

இதனை எளியமுறையில் நீக்க முடியும். இந்த இளநரையை மீண்டும் கருப்பாக்க மாற்ற பீர்க்காங்காய் பயன்படுத்தலாம்.

இவை இளநரையை தடுத்து முடியை மீண்டும் கருப்பாக மாற்றக்கூடியவை. தற்போது பீர்க்காயை கொண்டு இளநரையை எப்படி போக்குவது என்று பார்க்கலாம்.

தேவையானவை

 • பீர்க்கங்காய்
 • சுத்தமான தேங்காய் எண்ணெய் - இரண்டு கப்
 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

தயாரிப்பது எப்படி?

 • நன்றாக முற்றிய தோலோடு சீவி பீர்க்கங்காயை கழுவி துடைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 • இதை அகலமான தட்டில் போட்டு வெயில் படாமல் நிழலில் உலர்த்தவும். 3 முதல் 5 நாட்கள் வரை நன்றாக உலர வேண்டும்.

 • நன்றாக ஈரமில்லாமல் சுருங்கியபடி காய்ந்திருக்க வேண்டும். இரண்டு கப் துண்டுகளை காயவைத்து எடுத்து ஒரு கப் பீர்க்கங்காய்க்கு இரண்டு கப் சுத்தமான தேங்காயெண்ணெய் சேர்க்கவும்.

 • கண்ணாடி பாட்டிலில் தேங்காயெண்ணெய் சேர்த்து, அதில் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்க்கவும். இதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை ஊறவிடவும்.

 • பிறகு வாணலில் ஊறவைத்த தேங்காயெண்ணெய் பீர்க்கங்காயை வாணலியில் சேர்த்து 10 நிமிடங்கள் எண்ணெயை சூடேற்றி அதன் பிறகு வெந்தயம் ஒரு டீஸ்பூன் சேர்த்து வெந்தயம் எண்ணெயில் பொரித்ததும் அடுப்பை அணைக்கவும்.

 • வாணலியில் எண்ணெய் ஆறியதும் இறக்கி வடிகட்டி பாட்டிலில் ஊறவிடவும்.

எப்படி பயன்படுத்தலாம்?

 • தினமும் இதை கூந்தலில் தடவலாம். உள்ளங்கைகளில் ஊற்றி சூடேற்றி பிறகு உச்சந்தலையில் ஸ்கால்ப் பகுதியில் தடவி கொள்ளவும்.

 • பிறகு விரல்களால் நன்றாக மசாஜ் செய்து கூந்தலுக்கு தடவி வந்தால் நிச்சயம் இளநரை மறைந்து கருமையாக மாறும்.

 • இளநரை மறைந்தபிறகும் இந்த என்ணெயை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவருமே இதை பயன்படுத்தலாம். பக்கவிளைவுகள் இல்லாதது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்