வெறும் 30 நாட்களில் அடர்த்தியான முடி வளர! இந்த தைலம் மட்டும் போதும்

Report Print Fathima Fathima in அழகு

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என பாரபட்சமே இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது முடி கொட்டுதல்.

இதற்கு கண்டகண்ட ஷாம்பூக்கள், எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும்.

எனவே வீட்டிலேயே மிக எளிமையான முறையில் செய்யக்கூடிய வெங்காய தைலத்தை கொண்டு அடர்த்தியான முடியை பெறலாம்.

தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய்- 200 ML
  • தேங்காய் எண்ணெய்- 200 ML
  • சிறிய வெங்காயம்- 4 அல்லது 5
  • காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள்- 1/2 கப்
  • வெந்தயம்- 1/2 கப்
  • கறிவேப்பிலை- 1 கப்
  • மருதாணி இலைகள்- 1/2 கப்
  • செம்பருத்தி பூக்கள்- 4 அல்லது 5

செய்முறை

ஒரு கனமான அடிப்பாகமுள்ள வாணலியை எடுத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பிலேற்றி தீயை மீடியமாக வைக்கவும்.

முதலில் நல்லெண்ணெயையும் பின்னர் தேங்காய் எண்ணெயையும் வாணலியில் விட்டு எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது அதில் முதலில் வெந்தயத்தை இடவும்.

வெந்தயம் சிவக்க பொறிந்ததும் அதில் அடுத்ததாக நசுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

வெங்காயம் கருகக் கூடாதா அளவில் அதையும் மிதமாக வறுக்கவும். வெங்காயம் சிவக்க வறுபட்டதும் அடுத்ததாக காய்ந்த நெல்லிக்காய்த் துண்டுக்களைச் சேர்க்கவும்.

நெல்லிக்காய் பொறிந்ததும் அடுத்து கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலைகளைச் சேர்க்கவும். இலைகள் மொறு மொறுவென வறுபட்டதும் கடைசியாக செம்பருத்திப் பூக்களை இடவும்.

5 அல்லது 6 நிமிடங்களுக்கு இதுவரை இட்ட பொருட்கள் அனைத்தும் சூடான எண்ணெய்க்குள் நன்கு மூழ்கி இருக்கட்டும்.

அப்போது தான் அவற்றிலிருக்கும் எசன்ஸ் மொத்தமும் எண்ணெய்க்குள் இறங்கும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கழித்து எண்ணெய் மஞ்சள் நிறத்திலிருந்து இளம்பச்சை நிறத்திற்கு மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

எண்ணெயில் சூடு முழுவதுமாகத் தணிந்ததும். ஈரப்பதமற்ற ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு இந்த வெங்காயச் சாறு கலந்த கூந்தல் தைலத்தைப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

கூந்தல் உதிராமல் இருக்க மேற்கண்ட வெங்காயச் சாற்றுத் தைலத்தை தலைமுடியின் வேர் முதல் நுனி வரை மென்மையாகத் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் வாரம் இருமுறை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இப்படி மசாஜ் செய்து மறுநாள் கூந்தலை ஷாம்பூவில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்