உதட்டு வெடிப்பை எளிய குணமாக்க வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
158Shares

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அணைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பாதிப்புதான்.

உதடுகளில் வெடிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. காற்று அதிகம் படுவதாலோ, உதடு அதிகம் உலர்ந்து போகும் நிலையில் வெடிப்பு உண்டாகிறது.

வைட்டமின் ‘பி’ குறைபாடு, புகைபிடித்தல் போன்றவையும் காரணம். புகைப்பிடிப்பதால் உதடுகளில் சுரக்கும் எண்ணெய்ப் பசை உண்டாகாது. அதனாலும் உதடுகளில் வெடிப்பு ஏற்படும்.

அப்படி ஏற்படும் போது அது மிகவும் உலர்ந்தும், சிவப்பு நிறமாகவும், மிகவும் கடினமாகவும் இருக்கும். சில நேரங்களில் ரத்தக் கசிவும் இருக்கும்.

அந்தவகையில் அதிலிருந்து விடுபட வேண்டுமாயின் சில எளிய இயற்கை குறிப்புக்களை கையாண்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

  • நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

  • உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

  • காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெயையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

  • எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்