பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா? இதனை எப்படி போக்கலாம்?

Report Print Kavitha in அழகு
1209Shares

பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம்.

பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவின் உள்ளிருக்கும் சீழை கிள்ளி கிள்ளி எடுத்தாலோ, அல்லது ஃபேஸ் பேக் போட்டு அழுத்தமாக தேய்த்தாலோதான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நின்று விடுகிறது.

இது நமது முக அழகையே கெடுத்துவிடுகின்றது. இதனை எளிய முறையில் கூட தீர்க முடியும் .

அந்தவைகயில் தற்போது முகப்பருவால் ஏற்பட்ட தழும்பை எப்படி குறைக்கலாம் என இங்கு பார்ப்போம்.

  • சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, ஒரு பஞ்சுருண்டை பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள பரு தழும்புகள் மறைவதைக் காணலாம்.

  • சந்தன கட்டையை ஒரு கல்லில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தேய்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை இரவு தூங்கும் முன் தழும்புகளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் கழுவ வேண்டும்.

  • சிறிது வெந்தயத்தை நீரில் போட்டு 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அந்த நீரை பஞ்சுருண்டை பயன்படுத்தி பருக்களால் வந்த தழும்புகளின் மீது தடவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், ஒரு வாரத்தில் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

  • ஒரு பௌலில் எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டை பயன்படுத்தி எலுமிச்சை சாற்றினை தழும்புகளின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து, அதோடு சிறிது பால் சேர்த்து கலந்து, பருக்களால் வந்த தழும்புகளின் மீது ஒரு நாளைக்கு ஒரு முறை தடவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகள் காணாமல் போகும்.

  • வேப்பிலை உங்கள் வீட்டில் இருந்தால், அந்த இலையை பரு வந்த இடத்தில் உள்ள தழும்பின் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி தினமும் பருக்களின் மீது வேப்பிலையை வைத்து வந்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகளால், தழும்புகள் மறையும்.

  • கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், தழும்புகள் வேகமாய் மறையும்.

  • ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் சரிசம அளவில் எடுத்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்