முகத்தை பொலிவாக்கும் வெந்தயம்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Report Print Kavitha in அழகு
371Shares

சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

வெந்தயம் முகத்திற்கு இயற்கையாகவே ஒரு பொழிவை தருகின்றது.

அந்தவகையில் வெந்தயத்தை வைத்து எப்படி முகத்தினை பொழிவாக மாற்றலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வெந்தையம் - 2 டீஸ்பூன்
  • வைட்டமின் ஈ எண்ணெய் - 1
  • தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • வாசனை திரவியம் - 2 சொட்டு

செய்முறை

வெந்தையத்தை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். மறுநாள் காலை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜெல் பதத்தில் வரும்.

பின் அதில் தேங்காய் என்ணெய், வைட்டமின் ஈ என்ணெய் மற்றும் தேவைப்பட்டால் நறுமணத்திற்கு வாசனை எண்ணெய் ஊற்றி நன்குக் கலக்குங்கள். இந்த கிரீமை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் காலை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பின்பு வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட முகம் ஜொலிக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்