உச்சந்தலையில் அரிப்பு புண் இருக்கா? அதனை எப்படி சரி செய்யலாம்?

Report Print Kavitha in அழகு
132Shares

பொதுவாக நம்மில் சிலருக்கு உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல், வலி என்று மாறி மாறி வரக்கூடும்.

இதற்கு முக்கிய காரணம் தலையில் புண், செதில் செதிலாக உதிர்வு, மென்மையான சருமம், வழக்கத்துக்கு மாறாக வலி, அதிகளவு பேன், சொரியாசிஸ், பொடுகு போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றது.

கோடைகாலத்தில், இதுபோன்ற பிரச்சனை மோசமடைகிறது, ஏனெனில் வெப்பம் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுகின்றது.

இதனை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வேப்பிலை

வேப்பிலையை காம்பு நீக்கி கல் உப்பு சேர்த்த நீரில் கலந்து மைய அரைக்கவும்.

இவை பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்ததும் கூந்தலின் வேர்ப்பகுதி முழுக்க உச்சந்தலை முழுக்க தடவி விடவேண்டும்.

பிறகு 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். வெறும் கைகளால் தடவினாலே போதுமானது. விரல்களால் இலேசாக சொரிந்தபடி அவ்வபோது செய்ய வேண்டும். இப்படி செய்தால் அரிப்பு நீங்குவதோடு அந்த இடத்தில் இருக்கும் கிருமிகளும் வெளியேறும்.

45 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக அதே போன்று விரல்களால் சொரிந்து சொரிந்து வெளியேற்ற வேண்டும்.

வாரத்தில் இரண்டு முறை இதை பயன்படுத்தலாம். அதிகளவு தீவிரமாக இருக்கும் போது இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்துவந்தால் பலன் விரைவில் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழையை எடுத்துவந்து அதன் மடலை வெட்டி உள்ளிருக்கும் மஞ்சள் திரவத்தை நீரில் ஊறவைத்து வெளியேற்ற வேண்டும்.

கற்றாழையை இரண்டாக வெட்டி, தோலோடு உள்பக்கமாக இருக்கும் ஜெல்லியை உச்சந்தலையின் மீது நன்றாக தேய்க்க வேண்டும்.

கற்றாழையின் பக்கத்தில் முள்கள் இல்லாமல் பார்த்துகொண்டால் போதும் கற்றாழை ஜெல் உச்சந்தலையின் மீது முழுவதுமாக இறங்கும்வரை மசாஜ் போன்று தேய்த்து விடவும்.

பிறகும் விரல்களால் உச்சந்தலையில் மசாஜ் செய்து கொண்டே இருக்க வெண்டும். 40 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசி எடுக்க வேண்டும்.

​எலுமிச்சைச் சாறு

எலுமிச்சை சாறை எடுத்து தலையின் உச்சந்தலை பகுதியில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். வறட்சியான சருமங்களை கொண்டிருப்பவர்கள் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து தேய்க்கலாம்.

இவை கூடுதலாக உச்சந்தலையில் வீக்கம், அரிப்பு, புண் போன்றவற்றையும் நீக்குகிறது.

எலுமிச்சை சாறை கூந்தலுக்கு பயன்படுத்தும் கண்டிஷனரோடு கலந்து உச்சந்தலையில் தேய்த்து, 5 நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு தலையை அலசினாலும் போதுமானது.

​ஹைட்ரஜன் பெராக்ஸைடு

தேவைப்படும் அளவுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு எடுத்துகொண்டு அதில் இரண்டு மடங்கு நீர்விட்டு கலக்க வேண்டும்.

இந்த நீர் கூந்தலை காட்டிலும் உச்சந்தலையில் ஸ்கால்ப் பகுதியில் அதிகமாக பட வேண்டும். அந்த நீரை கூந்தலை ஒதுக்கி ஸ்கால்ப் பகுதியில் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும்.

இந்த நீரை கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு பயன்படுத்தினால் போதும்.

​ஆளிவிதை எண்ணெய்

தலையில் நீர் தெளித்து ஈரப்பதமாக்கி கொள்ள வேண்டும். பிறகு ஆளிவிதை எண்ணெயை உச்சந்தலை முழுவதும் தடவி விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும்.

வெந்நீரில் டவலை நனைத்து, தலையை இறுக்கமாக கட்டி 30 நிமிடங்கள் வரை கட்டி இருக்க வேண்டும்.

ஆளிவிதை எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது உச்சந்தலையில் வறட்சியைத் தடுத்து ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. கிருமிகள் அழற்சி மற்றும் எரிச்சல் பிரச்சனையிலிருந்தும் தடுக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்