காதுகளில் ஏற்படும் பருக்களை எப்படி அகற்றலாம்? இதோ சில எளிய முறைகள்

Report Print Kavitha in அழகு
114Shares

பொதுவாக பரு என்பது முகத்தில் மட்டும் வருவதில்லை. தாடை, காது, கை, கால்களில் கூட வரும்.

அதிலும் காதுகளுக்கு உள்ளே ஏற்படும் பரு, முகத்தில் ஏற்படுவதை விட வேதனையை அதிகமாகவே தரக்கூடும்.

அந்தவகையில் காதுகளில் உண்டாகும் பருக்களை அகற்றுவது எப்படி எளிய முறையில் அகற்றலாம் என இங்கு பார்ப்போம்.

  • பூண்டையையும் கிராம்பையும் சாறு வெளியே போகாதவாறு நசுக்கி எண்ணெயில் கலந்து எண்ணெயை பூண்டும் கிராம்பும் நிறம் மங்கி கருமை ஆகும் வரை சூடேற்றி பிறகு எண்ணெயை இறக்கி வடிகட்டி அந்த எண்ணெயை காதுகளின் உள்ளே இருக்கும் பருக்கள் மீது தடவி விடவும். பிறகு எண்ணெய் இரு துளிவிட்டு காதை அதே பக்கமாக சில நிமிடங்கள் வைத்திருக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்துவந்தால் போதும்.

  • துளசி இலைகளை மண் போக சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் அலசி மிக்ஸியில் அரைத்து சாறு வடிகட்டி வைக்கவும். பிறகு சுத்தமான மெல்லிய பஞ்சில் நனைத்து காதின் பருக்கள் இருக்கும் இடத்தில் தொட்டு வைக்கவும். சிறிது நேரம் அதை அப்படியே வைத்து உலர்ந்ததும் சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்கவும். தினமும் 4 முதல் 6 முறை வரை இதை செய்யலாம்.

  • வெங்காயத்தை பாதியாக வெட்டி அதை தணலில் இளஞ்சூடாக இருக்கும் வரை தணலில் காண்பித்து பிறகு காதில் பருக்கள் இருக்கும் இடத்தின் மீது வைக்க வேண்டும். சூடு ஆறும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் வைக்கவேண்டும். அவை குளிரும் வரை வைத்து பிறகு மீண்டும் சூடாக்கி வைக்க வேண்டும். இதே போன்று வெங்காயத்திலிருந்து சாறு பிழிந்து அதையும் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி உலரவிட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு வேளை மட்டுமே நறுக்கினால் போதும்.

  • ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் தோய்த்து நனைத்து பருக்கள் இருக்கும் இடங்களின் மீது தடவ வேண்டும். பிறகு அவை உலர்ந்ததும் சுத்தமான நீரில் கழுவி எடுக்கவும். தினமும் நான்கு முதல் ஐந்து முறையாவது இதை செய்ய வேண்டும்.

  • சற்று கனமான துணியை எடுத்துகொண்டு நன்றாக கொதித்த வெந்நீரில் அழுத்தி எடுக்கவும். இதை இலேசாக பிழிந்து இரண்டு காதுகளின் பக்கவாட்டிலும் சற்றே சூடாக வைத்து ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒற்றி எடுக்கவும்.

முக்கிய குறிப்பு

  • காதுக்குள் செவிப்பறை இருப்பதால் செவிப்பறையில் தண்ணீர் போகாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

  • பருக்களை கூர்மையான பொருளால் குத்தி எடுக்க கூடாது.

  • பருக்கள் புண்களை ஏற்படுத்திவிட்டால் சுயமாக பராமரிப்பு செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்