இயற்கையில் முறையில் சருமத்தில் உள்ள முடியை நீக்குவது எப்படி தெரியுமா?

Report Print Kavitha in அழகு

பொதுவாக ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றியில் ரோமம் அதிகளவில் இருக்கும்.

இந்த முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று நீக்குவார்கள்.

ஆனால் அவ்வாறு சென்று பணத்தை வீணடிக்காமல் சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபட முடியும்.

மேலும் இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம், சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது.

அந்தவகையில் தற்போது சருமத்தில் உள்ள முடியை எப்படி இயற்கையில் முறையில் நீக்குவது என்று இங்கு பார்ப்போம்.

  • சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.
  • மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
  • ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
  • தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்