முகத்தை அழகூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் பயன்படுத்தி பாருங்க! பேரழகியாய் மாறிடுவீங்களாம்

Report Print Kavitha in அழகு

உலகில் காபி பிரியர்கள் அதிகம் உள்ளனர். காபி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காபி தூளை வைத்து சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.

காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும்.

இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும் சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உறித்து நீக்கும்.

அந்தவகையில் தற்போது காபி தூளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.

fontanabeautyvibes
  • காபி தூள் 2 டீஸ்பூன் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.
  • 2 டீஸ்பூன் காபி பொடியில் 1ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறையாக செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரிய படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.
  • கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • 4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை , கால்கள் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
  • 4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால் , கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்