அழகை கெடுக்கும் தடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

கை, கால் என இரு பாகங்களும் சந்திக்கும் ஒரே பிரச்சனை தான் இந்த தடித்த தோல் எனப்படும் கால்சஸ்.

கால்சஸ் அல்லது கால்சஸ் என்பது தோலின் வெளிப்புற அடுக்கை தடித்தல் மற்றும் கடினப்படுத்துதல் ஆகும்.

பெரும்பாலும் ஹை ஹீல்ஸ், மிகவும் இறுக்கமான அல்லது தளர்வான காலணிகள், வெறுங்காலுடன் நடந்து, சாக்ஸ் அணியாத நபர்களிடமும் இந்த நிலை ஏற்படும்.

இது அழகை கெடுப்பது மட்டுமின்றி, உடலின் செயல்பாட்டையும் கூட இது பாதிக்கக்கூடும்.

அந்தவகையில் இது போன்ற பிரச்சினையில் இருந்து விடுபட வீட்டு வைத்திய முறைகளை உள்ளன. தற்போது அவற்றில் ஒன்றை இங்கு பார்ப்போம்.

Google

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது ஏதாவது ஒரு வினிகர்
  • ஒரு பிரட் துண்டு
  • துணி
  • மெடிக்கல் டேப்

பயன்படுத்தும் முறை

  • சில தடித்த தோலில் வெடிப்பு ஏற்படவோ அல்லது புண்ணாக மாறவோ வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் ஆனால், முதலில் அந்த இடத்தை முற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும்.

  • பின்னர், அரை கப் வினிகரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதில் ஒரு துண்டு பிரட்டை போட்டு ஊற வைக்கவும். பிரட் துண்டை தேவையான காயத்திற்கு ஏற்ற அளவில் நறுக்கி போட்டு கொள்வது சிறந்தது.

  • பிரட் வினிகரில் நன்கு ஊறியதும், அதனை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து ஒரு துணியால் கட்டவும்.

  • பின்னர், மெடிக்கல் டேப் கொண்டு நன்கு சுற்றி கட்டுப் போடவும்.

நன்மை

  • வினிகரானது, சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகளை கொண்டது. வினிகரில் உள்ள அமிலத்தன்மை தோலை மிருதுவாக்க வல்லது.

  • பிரட்டை வினிகரில் ஊற வைத்து கட்டும் போது, வினிகரானது பாதிக்கப்பட்ட பகுதியில் நீண்ட நேரம் படுவதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers