சருமத்தளர்ச்சியை எளிதில் போக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக அனைத்து பெண்களும் வயதாகும் போது சந்திக்கு பிரச்சனைகளுள் ஒன்று தான் சருமத்தளர்ச்சி.

சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை என்றாலும் கூட சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும்.

அதுமட்டுமின்றி முகத்தின் சதைகள் தளரும் போது சருமம் தொங்கி சுருக்கங்கள் தோன்றுகிறது.

அத்தகைய சருமத்தின் தளர்ச்சியை போக்கும் இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும்.

அந்தவகையில் சரும தளர்ச்சியை போக்கும் அற்புத பேஸ் பேக் ஒன்றை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பாதாம் - 4
  • பாலில் ஊறவைத்த ஒட்ஸ் - 4 டீஸ்பூன்
  • பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  • கடலைமாவு - 2 டீஸ்பூன்
செய்முறை

பாதாமை பவுடர் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு அதனுடன் பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலந்துகொள்ளவும்.

இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்வதற்கு முன், பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும்.

ஃபேஸ் காஸ் (Gauze) எனப்படும் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்திவிட்டு, தயாராக உள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுக்க அப்ளை செய்யவும்.

அதன்பின் சில நிமிடங்கள் கழித்து, ஃபேஸ் காஸை நீக்கினால் போதும். முகம் தளர்ச்சியின்றி, பளிச்சென மாறியிருக்கும்.

இந்த பேஸ் பேக்கை ஒரு வாரத்தில், அதிகபட்சமாக இரண்டு நாள்கள் இந்தை ஃபோட்டுக்கொள்ளலாம்.

videohive

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...