உங்களுக்கு அதிகமாக முடி உதிர்கின்றதா? அதனை நிறுத்த இதோ சூப்பரான டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு

இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயம் முடி.

புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பது அனைவரும் தெரிந்த விடயமே.

முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதிய ஊட்டச்சத்து இல்லாமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகப்படியான கெமிக்கல் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அந்தவகையில் முடி உதிர்வு பிரச்னை தீர சில எளிய இயற்கை முறை வழிகள் பற்றி பார்ப்போம்.

img source: folder.pk/
  • கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
  • தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
  • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
  • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும்.
  • கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துவர முடிகொட்டுவது நிற்பதோடு, முடியும் நன்றாக வளரும்.
  • நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்