கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இதனை பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு
467Shares

கறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமின்றி கூந்தல் வளர்சியிலும் பெரிதும் உதவி புரிகின்றது.

ஏனெனில் கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது.

அதனால் அது தலைச்சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும மயிர்த்தண்டை நீக்கவும், பொடுகை தடுக்கவும் இது உதவும்.

அந்தவகையில் கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

  • வெந்தயம் 2 தேக்கரண்டி, சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளவும். வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு நாள் முன்பு ஊற வைக்க வேண்டும்.

  • நன்கு ஊறிய வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

  • இதனை தலையில் தடவி 45 நிமிடங்களுக்கு பிறகு தலையை அலசவும். வாரம் இருமுறை செய்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.

  • கறிவேப்பிலையை சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெயை சுட வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து குறைவான தீயில் சில நிமிடம் வைக்கவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி அதனை வாரம் ஒருமுறை உபயோகித்தால் நரை முடி வராது. முடி வளர்ச்சி தூண்டும்.

  • கறிவேப்பிலை, செம்பருத்தி பூ மற்றும் மருதாணியை அரைத்து சிறிது சிறிதாக தட்டி காயவைத்து, அதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி உபயோகித்தால் நல்ல பலன் தரும்.

  • கறிவேப்பிலை பொடி அல்லது கறிவேப்பிலையை அரைத்து தயிர் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இது முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை தருவதோடு பொடுகு, வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கிறது.

  • கறிவேப்பிலையை பொடி செய்து தினமும் 2 தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இவை ஆரோக்கித்தோடு கருகருவென அடர்த்தியான கூந்தலையும் பெற உதவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்