கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ சில வழிகள்

Report Print Kavitha in அழகு

கண்கள் ஒருவரது அழகை அதிகரித்து காட்டுவதில் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

அத்தகைய கண்களை சுற்றி கருப்பாக கருவளையங்கள் வந்துவிட்டால் கண்களின் வசீகர தன்மையே போய்விடும்.

அந்தவகையில் கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்களைப் போக்கவும் பல இயற்கை வழிகள் உள்ளன.

மேலும் கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

GETTY
  • தினமும் இரவில் படுக்கும் முன் 2 துளிகள் விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
  • கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.
  • சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்கள் நீங்கும்.
  • தினமும் கண் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், கண் பார்வை மேம்படும்.
  • தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும்.
  • உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தாலும், கருவளையங்கள் நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்