முக அழகை அதிகரிக்க வேண்டுமா? பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பெண்களாக பிறந்த அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற முகப்பூச்சுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

இதனை செலவிற்றி போக்க இயற்கை எண்ணெயான பாதாம் எண்ணெய் முகத்தின் அழகை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகின்றது.

ஏனெனில் இதில் வைட்டமின் ஏ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகமுள்ளது.

பாதாம் எண்ணை அதனுடைய பல்வேறு சரும மேம்படுத்தும் நன்மைகளுக்காக எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

இது உங்கள் சருமத்திலிருந்து உங்களுடைய இயற்கையான பொலிவை வெளிக் கொண்டு வருகின்றது.

மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய சருமத்திற்கு மென்மையான பளபளப்பை அளிக்கின்றது.

அந்தவகையில் பாதாம் எண்ணெயை கொண்டு எப்படி முக அழகினை பெறுவது என பார்ப்போம்.

  • தேன், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முக அழகாக மாசுமறுவற்று இருக்கும்.
  • 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சினால் தொட்டு சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.
  • உதட்டு கருமை நீங்க, தினமும் பாதாம் எண்ணெய் தடவி வரலாம். உதடு சிவப்பாக வேண்டுமென்றால் பீட்ரூட்டை வெட்டி காய வைத்து பொடியாக்கி பாதாம் எண்ணெயுடன் கலந்து உதட்டில் பூசிவர உதடு லிப்ஸ்டிக் போட்டாற்போல் இருக்கும்.
  • சோற்றுக்கத்தாழை சாறு ஒரு டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின்மீது மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீர்கொண்டு முகத்தை அலம்பினால் அழகான, மிருதுவான சருமத்தைப் பெறலாம்.
  • 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து கலக்கி, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகம் மாசு மருவற்று இருக்கும்.
  • 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 ஸ்பூன் பாலினை கலந்து முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முதத்திலுள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்