முட்டையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது? 20 நிமிடங்களுக்கு மேல் இதை செய்யாதீர்கள்

Report Print Abisha in அழகு
282Shares

முட்டை ஆரோக்கியமானதுதான். ஆனால் அதை தலையில் பயன்படுத்தும்போது என்ன செய்யவேண்டும்.

வெள்ளை கருவை எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும். அதன் பின்னர் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு அழுக்குகளை நீக்க தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கவும்.

குளித்த பின் துண்டால் துவட்டி, ஷாம்பூ தடவுவது போல் முட்டையை தலை முடியில் தடவவும். குறிப்பாக முடியின் நுனியில் கவனம் செலுத்துவது நல்லது. வெடித்த முடிகளை சீர் செய்து வலுவாக்கும்.

முட்டை தடவிய பின்னர், ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது துண்டால் தலையை மூடி வைத்து 10-20 நிமிடங்கள் ஊறவிடவும்.முட்டை தலையில் ஊறிய பின், முடியை குளிர்ந்த நீரில் அலசவும். முட்டையில் இருக்கும் அதிக புரத சத்தால் 20 நிமிடங்களுக்கு மேல் ​ஊறவைக்கும் பட்சத்தில் முடி பலவீனம் அடைய வாய்ப்புள்ளது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்