சருமத்தை புதுபொலிவுடன் வைத்திருக்கனுமா? கொய்யாய் பழம் தோலை இப்படி பயன்படுத்துங்க

Report Print Kavitha in அழகு

கொய்யாய் ஒரு மருத்துவம் குணம் வாய்ந்த பழம் மட்டுமின்றி சரும பராமரிப்பிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

ஏனெனில் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

இதனால், சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

கொய்யாய் பழம் தோலை பயன்படுத்தி சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி
  • முட்டை மஞ்சள் கரு - 1
  • தேன் - 1 மேசைக்கரண்டி
  • கொய்யா - ½ பழம்

செய்முறை

முதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும்.

20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அதிகரிக்கின்றது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்