முகப்பருவை போக்கி பொலிவு பெற வேண்டுமா? கொத்தமல்லி இருக்கே

Report Print Santhan in அழகு

இப்போது இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது முகத்தில் வரும் பருக்கள் தான், அதற்காக வெளியில் பல க்ரிம்களை வாங்கி முகத்தில் தடவுகின்றனர்.

அதற்கு உடனடி தீர்வு இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக இருக்காது. அப்படி இருக்கையில், நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கொத்தமல்லி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

  • கொத்தமல்லி சாற்றுடன் 2 தேக்கரண்டி பால் இதேயளவு வெள்ளரி சாறு 4 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் அளவில் வைத்து முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவினால் மென்மையான சருமத்தினை பெறலாம்.
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி சாறு, 2 தேக்கரண்டி தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வோட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள் முகத்தில் வரும் சிவத்த பருக்கள் இருந்த இடமே தெரியாது போகும்.
  • சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை சாறு ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து, அதில் 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். இது நல்ல ஸ்க்கரப் ஆகவும் தொழிற்படும்

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்