முகப்பொலிவை அதிகரிக்க வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!

Report Print Kavitha in அழகு

வாழைப்பழத்தையும், பாலையும் பயன்படுத்தி முகப்பொலிவை தக்கவைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

ஏனெனில் இவை இரண்டுமே சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தி புதுப்பொலிவு ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டவை.

தற்போது இதனை வைத்து எப்படி முகப்பொலிவை அதிகரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • வாழைப்பழம்
  • பால்
  • நீர்

செய்முறை

வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் பாலை ஊற்றி நன்றாக பிசைய வேண்டும்.

அதனை கையில் எடுத்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு அவை உலரும் வரை வைத்திருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்