அப்பழுக்கற்ற சருமத்தை பெறனுமா? வெந்தையத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு
350Shares

இன்றைய நடைமுறையில் என்னத்தான் அழகு மெருகூட்ட கிறீம்கள்,மருந்துகள் ஊசிகள் இருந்தாலும் இது வயதாக வயதாக சருமத்திற்கு பெரிதும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

இதற்கு உண்மையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களே சிறந்தது. இது முகத்தினை இயற்கை முறையில் சருமத்தை பாதுகாத்து இயற்கை அழகினை தருகின்றது

இதற்கு வெந்தையம் பெரிதும் உதவி புரிகின்றது.

இது வெந்தயம் சருமத்திற்கு குளிர்சியை அளித்து ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவி புரிகின்றது.

வெந்தயம் நச்சு நீக்கியாகவும் இருப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பெழிவு பெற செய்கின்றது.

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் - 2 ஸ்பூன்
  • மஞ்சள் - அரை ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
  • தண்ணீர் - ஒரு கப்

செய்முறை

வெந்தயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதோடு மஞ்சளும் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

நன்குக் கொதித்து திட நிலைக்கு வரும்போது அணைத்துவிடவும். அதை தற்போது வடிகட்டியில் இறுத்து தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தற்போது கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் சேர்த்து அதில் இந்த வெந்தயத் தண்ணீரையும் , ஒரு சிட்டிகை மஞ்சள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.

அதை தற்போது நன்கு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். ஜெல் தன்மையில் நன்குக் கலந்ததும் அதை காற்று புகாத பாடிலில் கொட்டி பயன்படுத்துங்கள்.

தினமும் இரவு முகத்தில் தேய்த்து வட்ட பாதையில் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பிரகாசித்து தெளிவாக மாறுவதை உணர்வீர்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்