2 வாரத்தில் தழும்புகளை அகற்ற வேண்டுமா? இதோ அற்புத தீர்வு

Report Print Kavitha in அழகு
271Shares

பொதுவாக சிலருக்கு தழும்புகள் முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.

தழும்புகள் பல வகைப்படும். குறிப்பாக அதில் ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன.

தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும்.

ஆனால் இதில் பல பக்க விளைவுகளும் உள்ளன.

இதனை இயற்கை முறையில் 2 வாரத்தில் போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் - கால் கப்
  • சுத்தமான தேங்காய் எண்ணெய் - கால் கப்
  • நறுமண எண்ணெய் - சில துளிகள்
தயாரிக்கும் முறை

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து குறைந்தது 5 நிமிடங்கள் நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் நறுமண எண்ணெய் கலந்து ஒரு கலவை கிடைக்கும் வரை கலக்க வேண்டும்.

ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த கலவையை எடுத்து மூடி வைத்து அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

இதை தினமும் குளித்த உடன் தழும்புகளில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் 2 வாரத்தில் மறைந்து விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்