உங்கள் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுகின்றதா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அதில் சிலருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.

இதனால் முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

இதற்கு சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதில் சரி செய்ய முடியும். அதற்கு முட்டை பெரிதும் உதவி புரிகின்றது.

ஏனெனில் முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டீன் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. அது சருமத்திலுள்ள துளைகளை சுருங்கச் செய்து, எண்ணெய் சுரப்பினை குறைக்க பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் இதனை வைத்து எப்படி எண்ணை பசையை போக்குவது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • யோகர்ட் - 1 மேசைக்கரண்டி
  • முட்டை - 1 (வெள்ளை கரு மட்டும்)

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து நுரை வருமளவுக்கு நன்றாக அடித்து கலக்கவும்.

அதனுடன் யோகர்ட்டை சேர்த்து இரண்டையும் கலக்கவும்.

இக்கலவையை முகத்தில் பூசி, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு நன்றாக கழுவவும்.

இதனை செய்வதனால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers