பித்த வெடிப்பு உங்கள் பாதங்களின் அழகை கெடுக்கின்றதா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
252Shares

பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைப்படுகின்றது. இது பாதங்களின் அழகையே கெடுத்து விடுகின்றது.

பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.

சில பெண்கள் இதற்காக பணத்தையும்,நேரத்தையும் செலவழித்து சலூன்களுக்கு செல்லது தான் வழக்கமாக கொண்டு உள்ளனர்.

மேலும் இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் சமையலை பொருட்களை கொண்டே இதை சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட்போல் செய்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.
  • வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.
  • பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.
  • மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.
  • வேப்ப எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் செய்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம். இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்க போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.
  • குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்