பொதுவாக சில பெண்களுக்கு முகத்தில் கருந்திட்டுக்கள் காணப்படும்.
முகத்தில் கண்ட வேதி பொருட்களை தடவுதல், ஊட்டசத்து குறைபாடு, வெயிலில் அதிகமாக இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது என சொல்லப்படுகின்றது.
இது முகத்தினை அழகினை கெடுத்து விடுகின்றது. இதனை போக்க உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது.
தற்போது இந்த உருளைக்கிழங்கை வைத்து எப்படி கருந்திட்டுக்களை போக்குவது என்று பார்ப்போம்.
தேவையானவை
- தேன் 1 ஸ்பூன்
- உருளைக்கிழங்கு சிறிது 1
- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
- மஞ்சள் சிறிது
- பன்னீர் சிறு துளி
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து அரைத்து கொள்ளவும்.
அடுத்து இதன் சாற்றை மட்டும் எடுத்து கொண்டு, இதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர், மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கருந்திட்டுகள் நீங்கி முகம் பொலிவாக மாறி விடும்.