குத்தும் வியர்க்குருவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இவற்றில் ஒன்றை பின்பற்றி பாருங்க

Report Print Kavitha in அழகு

கோடைக்காலம் வந்துவிட்டாலே வியர்குரு தானாக வந்து ஒட்டிக் கொள்ளுவதுண்டு.

வெயிலால் ஏற்படும் அதிகப்படியான அனல் காரணமாக அதிகம் வியர்த்து, சருமத்தில் சிறு தடிப்புகளுடன், சருமமும் சிவந்து வியர்க்குருவை உண்டாக்குகிறது.

இதனால் பலரும் பல நேரங்களில் அவதிப்படுவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாடாய்படுத்தும்.

வியர்க்குரு ஒருவருக்கு வந்தால், அது ஊசியால் சருமத்தை குத்துவது போல் இருப்பதுடன், எரிச்சலுடனும் இருக்கும்.

இதிலிருந்து எளிதில் விடுபட உதவும் சில எளிய வழிகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • முதலில் உடலை குளிர்ச்சியுடனும், நல்ல காற்றோட்டத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இறுக்கமான உடையை அணியும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
  • கோடையில் வெளிரிய நிறத்திலான உடை மற்றும் தளர்வான உடையை அணிய வேண்டும். இதனால் உடல் முழுவதும் காற்றோட்டம் சிறப்பாக இருந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
  • கோடையில் சிந்தடிக் உடைகள் அணிவதைத் தவிர்த்து, காட்டன் உடைகளையே தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
  • உடல் வெப்பமாவதைத் தடுக்க நீர்ச்சத்துள்ள பானங்களை அதிகம் பருக வேண்டும். குறிப்பாக இளநீர், எலுமிச்சை ஜூஸ், தண்ணீர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். ஆல்கஹால் மற்றும் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சாலட்டுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கோடையில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்து, உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • கோடையில் சருமம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். ஆனால் வியர்வை வெளியேறினால், அதைத் தவறாமல் துணியால் அவ்வப்போது துடைக்க வேண்டும். இதனால் சருமத்தில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைத் தடுக்கலாம். மேலும் கோடையில் பவுடரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
  • வியர்க்குரு அதிகம் இருந்தால், தயிரை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வியர்க்குரு போய்விடும்.
  • 200 மிலி ரோஸ் வாட்டர், 4 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 200 மிலி நீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, அவற்றை ஒரு மஸ்லின் துணியில் வைத்து, தினமும் 4-5 முறை வியர்க்குரு உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • சந்தன பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • 2 டீஸ்பூன் புதினா பேஸ்ட்டுடன், 3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers