நகங்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் ?

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்கள் தலைமுடிக்கும் முகத்திற்கு அடுத்து அடிக்கடி கவனம் செலுத்துவது தங்களது நகங்களில் தான்.

நகம் கூர்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என பெண்கள் அதிகம் ஆசைப்படுவதுண்டு.

விரலுக்கு ஒரு கவசம்போல அமைந்துள்ள நகமானது ‘கரோட்டீன்’ எனும் புரதப்பொருளால் ஆனதாகும்.

ஆனால் சிலருக்கு துர்திஷ்டவசமாக அடிக்கடி உடைந்து விடுவதுண்டு.

இருப்பினும் ஒரு நகம் முழுதாக வளர்வதற்கு நான்கிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும் எனப்படுகின்றது.

கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் வேகமாக வளரும். அதிலும் கோடை காலத்தில் அதிக அளவில் வளரும்.

கைவிரலில் ஒரு நகம் மாதத்துக்கு சுமார் மூன்று மில்லி மீட்டரும், கால் விரல் நகம் மாதத்துக்கு ஒரு மில்லி மீட்டர் வரையிலும் வளரும்.

மேலும் நகங்கள் உடையாமலும் கூர்மையாகவும் இருக்க பலவழிகள் உள்ளன. அதில் நாம் நகங்களை எப்படி பாதுகாக்கலாம் என இங்கு பார்ப்போம்.

 • அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 • கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள்.
 • நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் வாய்க்கும் சென்றுவிடும். இதனால் குடல் புழு முதல் டைபாய்டு வரை பல நோய்த்தொற்றுகள் ஏற்படும்.
 • குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
 • வேதிப்பொருட்களின் பயன்பாட்டால் நகங்கள் உடையும். இதைத் தவிர்க்க கைகளில் தகுந்த பாதுகாப்பு உறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
 • அடிக்கடி நகத்துக்கு பாலிஷ் போடாதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம்.
 • அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவார்கள் நகப்பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர்தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
 • தலைமுடிக்குச் சாயங்களைப் பயன்படுத்தும்போது தரமான சாயத்தைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தரம் குறைந்த முடிச்சாயங்களில் ‘பாராபினைலின் டையமின்’ (Paraphenylene diamine) எனும் வேதிப்பொருள் உள்ளது. இது நக இடுக்குகளில் படியுமானால் புற்றுநோய் உருவாகிற வாய்ப்பு உண்டு.
 • நகம் வறண்டு போயிருந்தால் பாலிஷுக்கு பதிலாக மாய்ச்சுரைசரை பயன்படுத்தலாம்.
 • போட்டா பிரின்ட் ரசாயனத்தில் வேலை செய்கிறவர்கள், தடயவியல் துறையில் வேலை செய்கிறவர்கள் போன்றோரின் நகங்கள் பழுப்பு நிறத்துக்கு மாற வாய்ப்புண்டு. இவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சரும நோய் நிபுணரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது.
 • ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள், கார்பன் கரித்தூள் வேலை, பெட்ரோலியம் மற்றும் டீசல் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கையுறை அணிந்து வேலை செய்ய வேண்டியது அவசியம். அதிலும் துணியால் செய்த கையுறையை உள்பக்கத்திலும், அதன் மேலே ரப்பர் கையுறைகளையும் அணிந்துகொண்டால் மிகவும் நல்லது.
 • பாட்டில் மூடி போன்றவற்றைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
 • நகங்களை அதிக நீளத்தில் வளர்க்க ஆசைப்படாதீர்கள். அப்படி வளர்க்கும்போது அடிக்கடி அதில் காயம் ஏற்பட வாய்ப்புண்டாகும். அது நகத்தின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
 • நகத்தின் அளவிலோ, நிறத்திலோ திடீர் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசித்துக்கொள்ளுங்கள்.
 • பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன், முழு தானியங்கள், காய்கறி, கீரைகள், கொட்டைகள், பயறுகள் போன்ற உணவுகளை அதிமாக சேர்த்துக்கொண்டால் நகம் ஆரோக்கியமாக வளரும்.
 • விரல் நகங்களைக் கடிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களைக் கவனமாக வெட்டுங்கள்.
 • பிளேடால் அல்லது கத்திரிக்கோலால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள்.
 • நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். முக்கியமாக, ஓரங்களில் உள்ள நகங்களை வெட்டும்போது அதிக கவனம் தேவை.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்