உங்க கால்களில் இப்படி இறந்த செல்கள் தேங்கியிருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்கள் கால்களில் உள்ள முடிகளை அகற்றுவது வழக்கமாகும்.

கால்களில் உள்ள முடிகளை நீக்கும் போது துவாரங்கள் அடைபடுவதால், வளர முடியாத முடிகள் மற்றும் ரேசர் காயங்களால் கால்களில் இறந்த செல்கள் எல்லாம் சேர்ந்து திட்டு திட்டாக காணப்படும்.

மேலும் இது இது ஏற்பட முக்கிய காரணம் முடியிழைகளில் எண்ணெய் பசை அடைத்து விடுவது தான்..

இதனால் சிலர் வெளியவே கால்களை காட்ட சிலர் தயங்குவார்கள்.

இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறையை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • உப்பு அல்லது சர்க்கரை - 2 டீ ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் மற்றும் சில துளிகள் எஸன்ஷியல் ஆயில் - 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 1 டீ ஸ்பூன்
  • லெமன் ஜூஸ் - 1/2 டீ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்குங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட்டை 2-3 நிமிடங்கள் கால்களில் அப்ளே செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள்.

அடைத்த சரும துளைகளை திறக்க முதலில் வெதுவெதுப்பான நீரில் கால்களை நனையுங்கள்.

இப்படி செய்யும் போது கால்களில் உள்ள துவாரங்கள் திறக்கப்பட்டு தூசிகள், எண்ணெய் பசைகள் எல்லாம் வெளியேறி விடும். கால்களும் பளபளப்பாகி விடும்.

இறந்த செல்களை ஸ்க்ரப் கொண்டு நீக்கிய பிறகு குளிர்ந்த நீரில் கால்களை கழுவுங்கள்.

மேலும் இது சரும துளைகளை மூடி திரும்பவும் எண்ணெய் பசை, அழுக்குகள் இவைகள் உள்ளே செல்லாமல் காக்கிறது.இதனால் சரும துளைகள் அனைத்து கருப்பாக மாறுவது தவிர்க்கப்படுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்