உங்க பாதங்களில் இதுபோன்ற செருப்பு அச்சு தெரிகிறதா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு பாதத்தில் வெயில் படியும் இடங்களில் கருமை படிந்து , போடும் செருப்பின் வடிவம் அப்படியே பாதத்தில் அச்சுப் பெறும்.

இதற்கு அழகு நிலையங்களுக்கு தான் சென்று இதனை மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில வீட்டு பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.

தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • தினமும் குளிப்பதற்கு முன் கடல் உப்பை பாதத்தில் தேய்த்து குளிக்கலாம். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்கு இறந்தசெல்கள் மறையும் சுருக்கங்களும் குறையும். வெயிலினால் உண்டாகும் கருமையும் மறையும்.
  • சிக்கரி கலக்காத காஃபிப் பொடியை பாதங்களில் தேய்த்து 1 நிமிடம் கழித்து கழுவுங்கள். சுருக்கம் கருமை மறையும். அழுக்குகளை எளிதில் களையும். பாதம் மிருதுவாக இருக்கும்.
  • தினமும் தூங்குவதற்கு முன் பட்டைப் பொடியை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து பாதத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவிப் பாருங்கள். வெடிப்பு குறையும். கருமை மறையும்.
  • ஓட்ஸை பொடி செய்து அதனுடன் சிறிது பால் கலந்து பாதங்களில் தேய்க்கவும். பாத மூட்டுகளில் உண்டாகும் சொரசொரப்பு, வெயிலினால் உண்டாகும் கருமை, சரும வியாதி ஆகிய பிரச்சனைகள் குணமாகிவிடும்.
  • 3 டீஸ் பூன் ஆலிவ் எண்ணெயில் 1 ஸ்பூன் உப்பு மற்றும் அரை மூடி எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து பாதங்களில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 1 முறை இப்படி செய்தால் பாதத்தின் நிறம் ஒரே மாதிரியாக பெறுவீர்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்