இன்றைய காலத்தில் உள்ள அதிக பெண்கள் தங்களது முடியினை ஸ்ட்ரெய்ட்னிங் செய்வதே விரும்புகின்றனர்.
பொதுவாக ஒரு முறை ஸ்ட்ரெய்ட்னிங் செய்தால் அது ஆறு மாதம்வரை தாக்குப்பிடிக்கும்.
இருப்பினும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்ய பயன்படுத்தும் கருவிகளின் விளைவுகளினால் சிலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்படும். மேலும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
குறிப்பாக ஸ்ட்ரெய்ட்னிங் செய்யும் போது அதிக வறட்சி ஏற்படுவது. முடிக்கு தேவையான ஈரப்பதத்தை ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது போடுகிற கெமிக்கல்களால் உறிஞ்சப்படும். இதுவே முடி அதிகமாக உதிர காரணமாக இருக்கும்.
இதற்கு நம் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும்.
இது முடிக்கும் இயற்கையாகவே பொழிவினை தருகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சோளமாவு அல்லது மைதா மாவு - இரண்டு ஸ்பூன்
- தேங்காய் பால் - 1/2 கப்
- சாதம் வடித்த கஞ்சி - 1/2 டம்ளர்
- வாசலின் - 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு அல்லது மைதா மாவு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் சாதம் வடித்த கஞ்சி 200 மில்லி மற்றும் தேங்காய் பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கட்டிகள் விழாதவாறு கிளறிவிடவும்.
கலவை நன்றாக கெட்டியானதும், 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் வாசலின் கலந்து கலவையை ஆறவிடவும்.
தயாரித்த பேக் ஆறியதும் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும், அதாவது தலைமுடியின் உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை நன்றாக இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு நன்றாக அப்ளை செய்த பிறகு சீப்பை பயன்படுத்தி தலைமுடியை நேராக சீவிவிட வேண்டும்.
பின்பு இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு தலைமுடியை ஷாம்போ போட்டு அலசி விடுங்கள்.
இவ்வாறு செய்வதினால் நாம் இயற்கையான முறையில் மிக எளிமையாகவே தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து விட முடியும்.
குறிப்பு
இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியில் எண்ணெய் பசை இருக்க கூடாது, ஆகையால் முதல் நாளே தலைமுடியை நன்கு அலசி, எண்ணெய் பசை இல்லாதவாறு தலை முடியை வைத்து கொள்ளவும்.