ஒளிரும் சருமம் வேண்டுமா? அப்போ இந்த பழத்தின் தோலை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன.

கொய்யாவில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ ஆகியவை ஏராளமாக உள்ளன.

இவை நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

இது உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஒளிரச் செய்கின்றது மற்றும் சருமத்தை தளர்த்தி மென்மையாக்குகின்றது.

அந்தவகையில் இந்த அற்புத ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை:

  • தேன் - 1 தேக்கரண்டி
  • கொய்யா பழத்தின் தோல்

செய்முறை

முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்

இறுதியாக இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்