கோடை வெயிலால் ஏற்படும் சரும எரிச்சலைத் தடுக்கணுமா? அப்போ இந்த ஃபேஸ் பேக்குகளில் ஒன்றை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

கோடைகாலம் வந்துவிட்டாலே அனைவருக்கு வெயிலில் செல்ல தயக்கமாகவே இருக்கும்.

ஏனெனில் வெயில் செல்வதனால் சூரியக்கதிர்கள் நேரடியாக முகத்தை தாக்கி முகத்தின் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏரித்துவிடுகின்றது.

இதில் இருந்து தப்பிக்க என்னத்தான் கிறீம்களை போட்டாலும் அது நிரந்த தீர்வை தரதாது.

அந்தவகையில் கோடையில் சூரியக்கதிர்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சரும செல்களை குளிர்ச்சியூட்டும் சில சில இயற்கை ஃபேஸ் பேக்குகள் உதவி புரிகின்றன. தற்போது அதில் சிலவற்றை பார்ப்போம்.

  • வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
  • தர்பூசணியை அரைத்து முகத்தில் தடவி உலர வைத்து, ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்
  • ஆரஞ்சு பழத்தின் சாற்றினை முகத்தில் தடவி உலர வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சு கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெள்ளையாக்கலாம்.
  • முலாம் பழத்தை அரைத்து கை, கால், முகத்தில் தடவி ஊற வைத்து தினமும் கழுவ, சருமம் குளிர்ச்சியுடன் இருக்கும்.
  • கருப்பு நிற திராட்சையை கொண்டு சருமத்தை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சரும செல்களும் நன்கு குளிர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
  • இளநீரைக் குடிப்பதுடன், அதனைக் கொண்டு முகத்தைக் கழுவுவதன் மூலமும் அதில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் குளிர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.
  • ஸ்ட்ராபெர்ரி பழங்களை வாங்கி அதில் சிறிதை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்