பொடுகை மறைய செய்ய வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

தலை வறண்டு காணப்படும்போது பொடுகு தோன்றும் அல்லது தலையில் பூஞ்சை தொற்று ஏற்படும்போது பொடுகு தோன்றும்.

இதனை நீக்க ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பு பயன்படுத்தலாம். அனால் அவற்றை பயன்படுத்தும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள இரசாயன பொருட்களால் தலை முடிக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தி விடுகின்றது.

பொடுகை போக்க எளிதான சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • விளக்கெண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலசினால், ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து, பொடுகு வருவது குறையும்.
  • தயிர், எலுமிச்சை, தேன் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச பொடுகு தொல்லை விலகும்.
  • வேப்பிலையை ஒரு கையளவு எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரால் ஷாம்பு போட்டு தலையை அலசிய பின் இறுதியில் வேப்பிலை நீரால் அலச, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பொடுகு வருவது குறையும்
  • பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பொடுகு வேகமாக மறையும்.
  • கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் நீரில் ஷாம்பு பயன்படுத்தாமல் வெறுமனே அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, தலைமுடியும் நன்கு ஆரோக்கியமாகவும் பட்டுப்போன்றும் இருக்கும்.
  • 3 பங்கு நீரில், 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலசினால், பொடுகைப் போக்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers