கரும்புள்ளிகளை எளிதில் போக்க இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

முக அழகினை கெடுப்பதில் கரும்புள்ளியும் ஓர் முக்கிய பங்கு வகிக்கின்றது.

முகத்தில் உள்ள கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும்.

இதனை வீ்ட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும்.

சருமத்தை சுத்தப்படுத்தி கரும்புள்ளியை அகற்ற எளிதான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை இங்கு பார்ப்போம்.

  • எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், விரைவில் கரும்புள்ளிகளானது நீங்கிவிடும்.
  • சந்தனப் பொடியுடன், கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு, நன்கு உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
  • பூண்டு மற்றும் வெங்காய சாற்றினை ஒன்றாக கலந்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
  • தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை இரண்டாக வெட்டி, முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால், அவை கரும்புள்ளிகளை மறையச் செய்யும். மேலும் இந்த முறையை தினமும் முகத்திற்கு செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
  • ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், அவை கரும்புள்ளிகளை மாயமாக மறையச் செய்துவிடும்.
  • கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தினமும் தடவி உலர வைத்து, கழுவி வர வேண்டும்.
  • உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
  • பப்பாளியை மசித்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers