ஒரே இரவில் பளபளப்பாக வேண்டுமா? இந்த விதைகளை பயன்படுத்தினால் போதும்

Report Print Kavitha in அழகு

இன்று சந்தையில் முகத்தை அழகாக்க கூடிய பல்வேறு அழகு சாதன பொருட்கள் விற்கப்பட்டு கொண்டு வருகின்றன.

முகத்தை அழகாக வேண்டும் என நினைத்து பலரும் கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கி முகத்திற்கு உபயோகித்து கொண்டு வருகின்றன.

இது முற்றிலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் முகத்தின் அழகை ஒரே இரவில் மாற்றிவிட எள்ளு விதைகள் பெரிதும் உதவி புரிகின்றது.

தற்போது இந்த எள்ளு விதைகளை வைத்து முகத்தை எப்படி அழகாக்குவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • மஞ்சள் 1/2 ஸ்பூன்
  • பன்னீர் 1 ஸ்பூன்
  • அரைத்த எள்ளு 1 ஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர் சிறு துளிகள்
செய்முறை

முதலில் எள்ளை பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் காணாமல் போய் விடும்.

அல்லது நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது சேர்த்து கொண்டு முகத்தில் தடவினால் முகப்பருக்களை ஒழித்து விடலாம்.

இதனை பயன்படுத்துவதனால் முகம் பளபளப்பாக மாறி விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers