மார்பு பகுதியில் இதுபோன்ற மருக்களா? உடனே போக்கும் வீட்டு வைத்தியம்

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்களுக்கு கழுத்திற்கு கீழ் மார்பு பகுதியில் மருக்கள் தோன்றுவதற்கு அதிகம்.

இது மார்பில் அதிக அளவு எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால் உடலின் மற்ற பகுதிகளை விட இங்கே மருக்கள் அதிகமாக தேன்றுகின்றது.

ஹார்மோன் மாறுபாடுகள், ஆரோக்கியக் குறைவான உணவு, மன அழுத்தம், அளவுக்கு மீறிய புகைப் பழக்கம் மற்றும் மது அருந்துதல் மற்றும் அதிக அளவு அழகுப் பொருட்கள் பயன்பாடு ஆகியவை மார்பு மருக்கலுக்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகின்றது.

இதற்கு நாம் வைத்தியரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • எலுமிச்சைப் பழத்துண்டை பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தேய்க்கலாம் அல்லது ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம்.
  • இரவு உறங்கச் செல்லும் முன் பாதிக்கப்பட்ட பகுதியில் சற்று டூத் பேஸ்டை தடவி காலை எழுந்தவுடன் அதை தண்ணீரில் கழுவி விடவும். பலன்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து இதை செய்துவரவும்.
  • தண்ணீர் கொஞ்சமும் அதில் சரிபாதி ஆப்பிள் சிடர் வினிகரும் எடுத்து கலந்துகொள்ளவும். அதில் ஒரு பஞ்சுருண்டையை முக்கி உடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். இது சருமத் துவாரங்களை சுத்தம் செய்து இறந்த செல்களை நீக்கக் கூடியவை இது மருவை விரைவாக வற்றைச் செய்துவிடும்.
  • வாரம் ஒருமுறை ஆப்பிள் சிடர் வினிகரை நீங்கள் கிறீன் டீ, சர்க்கரை மற்றும் தேன் சேர்ந்த கலவையாகவும் பயன்படுத்தலாம்.
  • கற்றாழை மருக்களை காயவைக்கும் ஆந்த்ராகினான் எனப்படும் வேதிப்பொருளையும் பிளேவனாய்டுகளையும் கொண்டுள்ளது. இதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் தேய்த்துவிட்டால் அது ஆழ்ந்து சருமத்திற்குள்ள செல்லும். அதை அப்படியே ஆறவிடவேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை மருக்கள் முற்றிலும் மறையும் வரை இதை செய்துவாருங்கள்.
  • ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து பசை போன்று செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.
  • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை ரோஸ் வாட்டரில் கலந்து கூழாக செய்து அதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவுங்கள். அது உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...