தலையில் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அற்புத தீர்வு

Report Print Kavitha in அழகு

பெண்கள் முகத்திற்கு நிகராக தலைமுடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

பொதுவாக எல்லா பெண்களுக்குமே தலைமுடி நீளமாகவும் அழகைாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

தலை வியர்ப்பதனாலும் பொடுகு பிரச்சினை இருப்பதனாலும் சிலருக்க தலையில் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

இதற்கு முக்கிய காரணம் பலரும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சினை எளதில் போக்குவதற்கும் முடியை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்.

  • 3 பங்கு நீரில் 1 பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் அலசுங்கள்.
  • டீ-ட்ரீ எண்ணெயை நீரில் கலந்து, அந்த நீரினால் தலையை சிறிது நேரம் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து ஷாம்புவால் அலசுங்கள். அது தலையில் பொடுகு இருந்தால், அவற்றை நீக்கி, தலையில் வீசும் துர்நாற்றத்தையும் தடுக்கும்
  • தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்காப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையால் தலையை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், தலையில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
  • லாவெண்டர் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் அதை சரிசெய்யும். அதற்கு தலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை நன்கு உலர வைத்து, பின் இந்த எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.
  • ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிர வைத்து, பின் அந்நீரினால் தலைமுடியை அலச, தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers