நகங்கள் இப்படி மஞ்சள் கறை படிந்து இருக்கா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு
110Shares

முகத்தின் அழகிற்கு முக்கியத்துவதும் கொடுப்பது போன்று தான் நகங்கள் அழகிலும் நம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

பொதுவாக நகங்களின் நிறத்தை வைத்து நமது உடலில் உள்ள நோய்களைக் கண்டறிய முடியும்.

நகம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தைராய்டு, சோரியாசிஸ், நீரழிவு, கல்லீரல் கோளாறு உள்ளிட்டவற்றின் அறிகுறியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

குறிப்பாக நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம் இல்லாவிடின் நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். இவற்றை இரசாயன முறையில் எளிதில் நீக்கலாம் ஆனால் இயற்கை முறையில் நீக்குவே ஆரோக்கியமனதாகும். தற்போது அவற்றை பார்ப்போம்.

 • ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் லெமன் ஜூஸை பிழிந்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதங்களை அந்த நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதே மாதிரி லெமனைக் கொண்டு உங்கள் கால் நகங்களில் தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் விரைவில் நகங்களில் உள்ள மஞ்சள் கறை போய்விடும்.
 • ஒரு பக்கெட் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆல்கஹால் சேர்த்து அதில் பாதங்களை ஊற வையுங்கள். இதை தினமும் இரண்டு முறை என 5-10 நிமிடங்கள் செய்து வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் கறை விரைவில் மறைந்து விடும்
 • 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பாத நகங்களில் அப்ளே செய்து கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் சருமம் சென்ஸ்டிவ் ஆக இருந்தால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
 • 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பாத நகங்களில் அப்ளே செய்து கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் சருமம் சென்ஸ்டிவ் ஆக இருந்தால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
 • வெங்காயத்தை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நகங்களில் வைத்து தேயுங்கள். இது நகம் வளராமல் இருப்பதை சரி செய்யும், மஞ்சள் கறைகளை போக்கும்.
 • ஆர்கனோ மற்றும் ஆலிவ் ஆயிலை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். இதை நகங்களில் வைத்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 • .ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் கொண்டு ஆரஞ்சு பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி கை மற்றும் பாத நகங்களில் அப்ளே செய்யுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு டூத் பிரஷ் கொண்டு க்ளீன் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு இரு முறை என 1-2 வாரங்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 • ஒரு பாத்திரத்தில் 1/2 கப் ஆப்பிள் சிடார் வினிகர் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் அதில் நகங்களை ஊற வைக்கவும். பிறகு மென்மையான துண்டை கொண்டு நகங்களை துடைத்து விடுங்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை என 3-4 வாரங்கள் செய்து வந்தால் ஆரோக்கியமான நகங்களை பெறலாம்.
 • ஜூனியர் பெர்ரிகளை நசுக்கி கொள்ளுங்கள். ஒரு பெளலில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் 1 டீ ஸ்பூன் ஜூனியர் பெர்ரியை சேர்த்து கொள்ளுங்கள். அதில் 15 நிமிடங்கள் நகங்களை ஊற வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிறகு நகங்களுக்கு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி அழகு பெறும்.
 • ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்பை எடுத்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நகங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவி சிறுநீரக நேரம் ஊற விடுங்கள். பிறகு சோப்பை கொண்டு கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை என செய்து வாருங்கள்.
 • விட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அப்படியே மஞ்சள் நகங்களில் மாத்திரையை பிதுக்கி எண்ணெய்யை விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 • ஒரு பெளலில் 3 பங்கு நீர் மற்றும் 1 பங்கு வினிகரை எடுத்து கொள்ளுங்கள். மஞ்சள் கறை படிந்த நகங்களை அதில் 4-5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு மென்மையான துணியைக் கொண்டு நகங்களை துடைத்து விடுங்கள். வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.
 • பூண்டுப் பற்களை எடுத்து மஞ்சள் நகங்களில் தேயுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே காத்திருக்கவும். ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து கழுவுங்கள். இது நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கி இயல்பான நிறத்திற்கு மாற்றி விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers