எந்த க்ரீமும் இல்லாமல் முகம் பளபளக்க வேண்டும் ? இதோ இருக்கே சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பெண்கள் வெள்ளையாவதற்கு கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கையான முறையில் அழகினை தக்கவைப்பது குறித்து இங்கு காணலாம்.

டிப்ஸ் 1

 • பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
 • கனிந்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்
 • ரோஸ்வாட்டர் - சில துளிகள்
பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள்.

சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும்.

வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.

டிப்ஸ் 2

 • பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
 • குங்குமப்பூ - சிறிது
 • எலுமிச்சை சாறு - சில துளிகள்
பயன்படுத்தும் முறை

ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும்.

அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

டிப்ஸ் 3
 • பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
 • முல்தானி மட்டி - 2 ஸ்பூன்
 • ரோஸ் வாட்டர் - சி துளிகள்
பயன்படுத்தும் முறை

பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டியுடன் போதுமான அளவு நன்கு கொஞ்சம் இலகுவான பேஸ்ட் கிடைக்கும் அளவுக்கு ரோஸ்வாட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் இந்த பேஸ்ட்டை கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள். நன்கு காய விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு நன்கு கழுவுங்கள்.

டிப்ஸ் 4
 • பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
 • தேன் - 2 ஸ்பூன்
 • ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.

பின்னர் முகம் மற்றும் கழுத்து, கைகளில் அப்ளை செய்து கொண்டு 15 நிமிடங்கள் வரை உலர வையுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers