பற்கள் வெண்மையாக பளிச்சிட என்ன செய்ய வேண்டும்? இதோ சூப்பரான டிப்ஸ்

Report Print Jayapradha in அழகு
634Shares

நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான்.

நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால் நாம் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலைமை உருவாகும்.

ஆனால் அதை தவிர்த்து இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பளிச்சிடும் வெண்மையான பற்களை பெற உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்.

பற்கள் பளிச்சென்று வெண்மையாக இருக்க செய்ய வேண்டியவை

  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அதை கொண்டு பற்களை தேய்க்க வேண்டும். இம்முறையை இரண்டு வாரங்கள் தொடர்ந்து பின்பற்றினாலே பற்களில் நல்ல மாற்றம் தெரியும்.

  • தினமும் காலையில் பல் துலக்கலாம். கல் உப்பை தூளாக்கி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உப்பின் சொரசொரப்பு பற்களின் எனாமலை சேதப்படுத்திவிடும்.

  • வாழைப்பழத் தோலில் உள்ள பேஸ்ட் பற்களில் படரும் வரை பற்களில் மேலும் கீழும் நன்றாக தேய்க்க வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து டூத் பிரஷால் பேஸ்ட் பயன்படுத்தி சுத்தம் செய்து வாயை கழுவினால் உடனடி மாற்றத்தை காணலாம்.

  • தினமும் பற்களை சுத்தம் செய்வதற்கு முன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய் மற்றும் பற்கள் சுத்தமாகும்.

  • 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ள வேண்டும். பின் டூத்பிரஷை தண்ணீரில் நனைத்துக் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்ப வேண்டும். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் நீங்கி வெண்மையாக பளிச்சிடும்.

  • டென்டல் பிக் எடுத்துக் கொண்டு பற்களில் மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில், ஈறுகளில் படாமல் தேய்க்க வேண்டும்.

  • தினமும் காலையில் ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் கொண்டு இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை எளிதாக போக்கிவிடலாம்.

  • தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி-ல் விட்டமின் C இருப்பதால், இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் இந்த பழங்களின் தோலை பொடி செய்து தேய்த்து கொடுப்பதால் கடினமாக இருக்கும் மஞ்சள் கரை போய்விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்