உங்களின் அழகை அதிகரிக்க வேண்டுமா? உப்பு மட்டும் போதுமே

Report Print Jayapradha in அழகு

உப்பு உணவிற்கு மட்டுமின்றி சருமம், தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும்.

மேலும் ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து நீங்களும் உங்களின் அழகை அதிகரித்து கொள்ளுங்கள்.

முகம் அழகிற்கு

முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற 1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதை குளிக்கும் முன், முகம், கை, கால் மற்றும் உடலில் தடவி மென்மையாக சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

எண்ணெய் முகம்

முகத்தில் உள்ள எண்ணெய் பசை போக தினமும் 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பொடுகு

தலையில் உள்ள பொடுகை போக்க 2 டீஸ்பூன் உப்பை ஸ்கால்ப்பில் படும்படி ஈரமான விரல்களால் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

பற்கள்

பற்களில் உள்ள மஞ்சள் கரையை போக்க 1 டீஸ்பூன் உப்பு மற்றும் அத்துடன் 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, ஈரமான டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்க வேண்டும்.

நகம்

நகங்களின் அழகிற்கு 1/2 கப் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்நீரில் விரல் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...